பணம் பத்திரம்
பணம் பத்திரம், செல்லமுத்து குப்புசாமி, கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? அந்த சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்?, அதை எப்படி அதிகரிக்கலாம்? என்பது குறித்த பர்சனல் பைனான்ஸ் பற்றி செல்லமுத்து குப்புசாமி எழுதிய நூல். வீடு, தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது சரியானதா? பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? என்பது குறித்து எளிமையாக விளக்குகிறார். சேமிப்பின் அவசியத்தை விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.
Read more