தடங்கள்

தடங்கள், எம்.ஏ.சுசீலா, மீனாட்சி புத்தக நிலையம், விலை: ரூ.225. பெண்களும் நெருக்கடிகளும் தன்னுடைய அனுபவங்களிலிருந்தே இந்த நாவலை எழுதியதாகச் சொல்கிறார் நாவலாசிரியர் எம்.ஏ.சுசீலா. தனது பேராசிரியர் பணியில் எதிர்கொண்ட பலதரப்பட்ட பெண்களை நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார். நாவல் முழுக்கவும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சினைகள். பெண்களின் கோணத்திலிருந்தே அவர்களுடைய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கெல்லாம் ஆதார மையமாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் எப்படித் திணறுகிறார்கள் என்பனவற்றைச் சொல்வதே நாவலாசிரியரின் அக்கறையாக […]

Read more

தடங்கள்

தடங்கள், ராபின் டேவிட்சன், தமிழில்: பத்மஜா நாராயணன், எதிர் வெளியீடு, பக்.312, விலை ரூ.320. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ராபின் டேவிட்சன் என்ற பெண்மணி நான்கு ஒட்டகங்கள் மற்றும் தனது ஒரே சொந்தமான டிக்கிட்டி எனும் நாயை அழைத்து கொண்டு 1977 – ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாலைவன எல்லை நகரான ஆலிஸ் ஸ்பிரிங் என்ற ஊரில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை 1700 மைல்கள் தனியே பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விளக்கி அவர் எழுதிய பயண நூலான ட்ரேசஸ் […]

Read more