தடங்கள்
தடங்கள், எம்.ஏ.சுசீலா, மீனாட்சி புத்தக நிலையம், விலை: ரூ.225.
பெண்களும் நெருக்கடிகளும்
தன்னுடைய அனுபவங்களிலிருந்தே இந்த நாவலை எழுதியதாகச் சொல்கிறார் நாவலாசிரியர் எம்.ஏ.சுசீலா. தனது பேராசிரியர் பணியில் எதிர்கொண்ட பலதரப்பட்ட பெண்களை நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார். நாவல் முழுக்கவும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சினைகள். பெண்களின் கோணத்திலிருந்தே அவர்களுடைய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன.
பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கெல்லாம் ஆதார மையமாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் எப்படித் திணறுகிறார்கள் என்பனவற்றைச் சொல்வதே நாவலாசிரியரின் அக்கறையாக இருக்கிறது.
ஒவ்வொரு அனுபவத்தையும் கோத்துப்பார்த்துக்கொள்வது வாசகர் முன் இருக்கும் முக்கியமான பணி. குடும்பமும் சமூகமும் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பு எவ்வளவு இறுக்கமாகப் பெண்களைப் பிடித்து வைத்திருக்கிறது என்பதை இந்த நாவல் துலக்கமாக்குகிறது.
நன்றி: இந்து தமிழ், 31/10/2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030781_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818