கதவு திறந்ததும் கடல்

கதவு திறந்ததும் கடல், பிருந்தா சேது, தமிழினி பதிப்பகம், விலை: ரூ.130, கவிஞர், எழுத்தாளர் சே. பிருந்தாவின் தன் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு இது. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடித்தனமாகி, தனிக் குடும்பங்கள் உதிரி மனிதர்களாக வாழத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. நம் நாட்டில், ஒற்றைப் பெற்றோர் பெருகி வருவது தவிர்க்க முடியாத காலமாற்றம். அதன் சிக்கல்களை ஆராயவோ, எளிதாகக் கையாளவோ, மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற நிலைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்கவோ, யாரையும் குறை கூறாமல் தீர்வுகளைக் கண்டடையவோ பலர் முயல்வதில்லை. அப்படியான தீர்வை நோக்கி […]

Read more

நெஞ்சோடு கிளத்தல்

நெஞ்சோடு கிளத்தல், பாதசாரி, தமிழினி பதிப்பகம், விலை 70ரூ. ‘மீனுக்குள் கடல்’ தொகுப்புக்குப் பிறகு நீள்மௌனத்தில் ஆழ்ந்திருந்த பாதசாரி புதிய உற்சாகத்துடன் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத பாதசாரியின் மனநிழல் குறிப்புகள் வரிசையில் சமீபத்திய வரவு இது நன்றி: தி இந்து, 10/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆறா வடு

ஆறா வடு, சமயந்தன், தமிழினி பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 120ரூ. ஈழப்போரின் துயரமான பக்கங்கள் போர் பின்னணியிலான கதையுடன் அதிர்ச்சியும் பதற்றமும் ஊட்டும் ஈழ இலக்கியத்தின் முக்கியமான நாவல். எண்பதுகளில் தீவிரமான ஈழத்தமிழர் அரசியல் பிரச்சனையின் விளைவுகள் இன்றளவும் தொடர்கின்றன. இலங்கை அரசாங்கத்தினை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய தமிழர் இயக்கங்களின் செய்றபாடுகள், சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறை, இந்திய அரசின் அமைதிப்படை உள்ளிட்ட நடவடிக்கைகள் எனத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் அளவற்றவை. ஈழத்தில் தமிழின விடுதலையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மக்களின் […]

Read more