ஒப்பில்லா நாயகி

ஒப்பில்லா நாயகி,  மூலம்: ஷாபு, தமிழில்: கே.வி.ஷைலஜா, வெளியீடு: வம்சி புக்ஸ், விலை: ரூ.350. வாழ்க்கையின் மர்மம்தான் அதன் சுவாரசியம். ஒரு பெண்ணின் ஆர்வமும் தேடலும் இன்னொரு பெண்ணைச் சாய்த்துவிடுமா என்பது புதிரான கேள்வி. அம்மாவால் கைவிடப்படும் சிறுமி, துயரங்களிலிருந்து மேன்மை அடைகிற கதைதான் உமாவுடையதும். அம்மா, சித்தி இருவருமே தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள சிறுமி உமாவைப் பிரிந்துசெல்கின்றனர். உமாவுக்குத் தெரிந்ததோ அன்பின் மொழி மட்டுமே. வன்மத்துக்குப் பரிசாக அவர் அன்பைத்தான் கொடுத்தார். அதுதான் அவரை ஆலமரமாக வளர்த்தெடுத்தது. அதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ நூல் மூலம் உலகுக்கு […]

Read more

கதை கேட்கும் சுவர்கள்

கதை கேட்கும் சுவர்கள், ஷாபு கிளிதட்டில், தமிழில் கே.வி. ஷைலஜா, வம்சி புக்ஸ், விலை 350ரூ. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமலும் அடங்கிய பண்போடும் ஒரு தீராத சேவைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் உமா பிரேமனின் வாழ்க்கையைப் பேசும் புத்தகம்தான் ‘கதை கேட்கும் சுவர்கள்’. இது புனைவு அன்று; அசலான வாழ்க்கைச் சித்திரம். சுயசரிதை எனினும்கூடப் புனைவுக்கான சுவாரஸ்யத்தோடும் புதுப்புதுத் திருப்பங்களோடும் வாழ்க்கை தரிசனங்களைக் காட்சிகளாக்கி விரிகிறது. துயர் பூசிய தன் வாழ்வின் விம்மல்களைச் சுவர்களோடு மட்டுமே பகிர்ந்துகொள்கிறார் உமா. மலையாளத்தில் ஷாபு கிளிதட்டிலால் எழுதப்பட்ட இந்நூலை கே.வி.ஷைலஜா தமிழாக்கம் […]

Read more