தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210 தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று […]

Read more