முடங்கலில் மலர்ந்த மலர்கள்

முடங்கலில் மலர்ந்த மலர்கள் (வாழ்வியல் கட்டுரைகள்), தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.208, விலை ரூ. 200. பொதுமுடக்க காலத்தில் எழுதப்பட்ட இருபத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பிரபல ஆளுமைகள் குறித்து 13 கட்டுரைகளும், திருக்குறள், சைவம் – வைணவம் குறித்த பெருமைகளைவிளக்கி ஒரு கட்டுரையும், தனிப்பாடல்கள், தாய்மை, ரமலான் ஆகியவை குறித்த 5 கட்டுரைகளும் தவிர, மற்றவை சமூகம் சார்ந்தவை என்று, இந்நூலின் வாழ்த்துரையில் உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் பட்டியலிட்டுள்ளார். இது தவிர, இக்கட்டுரைகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நூலாசிரியர் உழைப்பு தெரிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். […]

Read more

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, தி.இராசகோபாலன்,  வானதி பதிப்பகம், பக்.200, விலை ரூ.120.  முதலாழ்வார்களுள் முதன்மையானவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். இவர் ‘பெரிய திருவடி’யின் அம்சம். தாய்மையின் பெருமையைப் பிள்ளைத்தமிழ் மூலம் உலகுக்கு எடுத்துரைத்ததோடு, வளர்ப்பு மகளையும் (கோதை) ஆழ்வாராக்கிக் (ஆண்டாள்)காட்டியவர். முன்னோர் மொழியைப் போற்றுவதுடன், அவற்றை தம் படைப்பில் பல்வேறு இடங்களில் கையாண்டு வைணவத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர். மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தியினால் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளபோதிலும், அவர்கள் ‘பகவானுக்குக் குறையொன்றும் இல்லாதிருப்பதே நமக்கு மங்களம்’ என்று எண்ணிச் செய்துள்ளார்கள். ஆனால் விஷ்ணுசித்தரோ, சர்வ இரட்சகனையும் […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.248; ரூ.200 சமூகத்தில் நிலவும் அவலங்களை எந்தவித சமரமும் இல்லாமல் தனது பார்வையில் துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். மனிதநேயம், இலக்கியம், ஆன்மிகம் என பல துறைகளில் தேசத்துக்காகப் பாடுபட்ட சான்றோர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் அது அடித்தளமாகிய வாக்காளர்களின் பலவீனம் எனக் கருத வேண்டும் என்கிறது வாக்காளன்- ஒரு வேடிக்கை மனிதன் என்ற கட்டுரை. மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது சித்தர் சொல் கேளீர் என்ற கட்டுரை. கலக மானுடப் […]

Read more