நொச்சி

நொச்சி அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் ஆய்வு – ஆவணம், பரிசல் வெளியீடு, சென்னை, விலை 130ரூ. நொச்சி நூலில் 28 பதிப்பாளுமைகள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தவிர 27 பதிப்பாளுமைகள் தொடர்பான தகவல் குறிப்புகளையும் தொகுத்து பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளனர். தமிழ்ப் பதிப்பு வரலாறு என்பது இதுவரை ஒரு சார்பாகவே எழுதப்பட்டுள்ளது. உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரப்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆறுமுக நாவலர், இரா. இராகவையங்கார் போன்ற செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் மட்டும்தான் பதிப்பாளர்கள் என்ற பிம்பம் தொடர்ந்து நிறுவப்பட்டுக்கொண்டே […]

Read more