மனவளர்ச்சி குன்றுதல்
மனவளர்ச்சி குன்றுதல், ந. செந்தில் குமார், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 204, விலை 130ரூ. மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மனநலக் குறைபாடு வேறு என்பதை ஆசிரியர் நூலின் ஆரம்பத்திலேயே விளக்கிவிடுகிறார். மனவளர்ச்சிக் குறைபாடு என்பது முழுக்க முழுக்க மூளையின் செயல்பாடுகளில் உண்டாகும் குறைபாடாகும். இந்த அடிப்படையில் மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கான பல்வேறு காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது வரை ஒவ்வொரு வயதிலும் என்னென்ன வளர்ச்சிப் படிநிலைகளை அடையுமோ, அவற்றை அடையாவிட்டால் அக்குழந்தை மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். […]
Read more