மனநிழல் காட்சிகளும் சலனங்களும்
மனநிழல் காட்சிகளும் சலனங்களும், ந.பிச்சமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவரான ந.பிச்சமூர்த்தியின் கவிதையும் அல்லாத, கட்டுரையும் அல்லாத, கதையும் அல்லாத புதுவகை அனுபவத் தெறிப்புகளின் தொகுப்பு இந்நூல். வாழ்க்கையை தன் கவிதைக் கண்களால் மிக நுட்பமாக, அழகாகப் பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பிச்சமூர்த்தி. அவர் வாழ்வின் நேரடி அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. கூடவே அவருடைய வாழ்க்கைப் பார்வையும். மிகச் சிறு விஷயங்களிலும் கூட, இந்த வாழ்க்கைப் பார்வை வெளிப்படுகிறது. பிய்ந்து போன செருப்பைப் பற்றிக் கூறும்போது, இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் […]
Read more