பாரதிதாசன் காப்பியங்கள்
பாரதிதாசன் காப்பியங்கள், பேரா.சு. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 376, விலை 1300ரூ. புரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய காப்பியங்களின் மொத்தத் தொகுப்பு இது. இதில் எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, உள்ளிட்ட 9 பெருங்காப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. 1930ல் அவர் முதன் முதலாக எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி’ உள்ளிட்ட ஆறு சிறுகாப்பியங்களும் அடங்கும். காப்பியங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் பாரதிதாசன் விரும்பிய சமுதாய மாற்றங்களைப் பாடுபொருளாகக் கொண்டவை. சமுதாய மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்பவை. நன்றி: குமுதம், 17/8/2016.
Read more