உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், பி.சி.கணேசன்,நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், பி.சி. கணேசன், நர்மதா பதிப்பகம், விலை 120ரூ. உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன், ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நவீன விருட்சம், அழகிய சிங்கர்,விலை 100ரூ. 1988ம் ஆண்டு […]

Read more