பெரிய புராணம் எளிய நடையில்
பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.
Read more