சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள்

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள், ம.சுஜாதா, காவ்யா, விலை 580ரூ. சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள் தொடர்பாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது ஆய்வு அறிக்கையை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க காலப் பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இல்வாழ்க்கை, விருந்தோம்பல், உணவு முறை, வாணிபம், விளையாட்டு, சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், அழகுக் கலை ஒப்பனை ஆகியவை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தன என்பது தகுந்த மேற்கோள்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more