உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழாக்கம் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. கடலைக் கடக்க வேண்டுமானால் படகு முக்கியம். அதுபோல் வாழ்க்கைக் கடலைக் கடக்க குரு எனும் தோணி அவசியம். குருவின் துணையோடு வாழ்க்கைக் கடலில் குதித்து, ஒவ்வொன்றாய்க் கடந்து, பறிகு குருவையும் துறந்து ஞானக்கடலில் சுதந்தரமாக நடந்து அதனைக் கடப்பது எப்படி? சூட்சுமமான சூஃபி கதைகள் மூலம் ஓஷோ சொல்லித் தந்த ஞானவழிகாட்டல், எளிய தமிழில். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு

தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு, அருள்நிதி மன்னார்குடி பானுகுமார், அழகு பதிப்பு, விலை 250ரூ. “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”. இதுவே தாயுமானவரின் அடிப்படை நோக்கமாகவும், தாரக மந்திரமாகவும் இருந்தது. திருச்சி மலைக்கோட்டையில் கோவில் கொண்டிருக்கும் இறைவன் பெயருடன் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தாயுமானவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) இவருடைய சொந்த ஊர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், அவர் பாடல்களின் சிறப்பையும் அழகு நடையில் எழுதியுள்ளார், அருள்நிதி மன்னார்குடி பானுகுமார். நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more