உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன்

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன், விளக்க உரை, சு. சிவபாதசுந்தரனார், சந்தியா பதிப்பகம்,  பக்.238,  விலை ரூ.225.   சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பது போலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்களுள் நான்காமவரான உமாபதி சிவாச்சாரியார், “மெய்கண்ட சாத்திரம்’ என்று கூறப்படும் பதினான்கு நூல்களுள் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். “சித்தாந்த அட்டகம்’ எனப்படும் அவற்றுள் ஒன்றுதான் “திருவருட்பயன்’. இந்நூலுக்கு சைவ அறிஞர் இலங்கை சு. சிவபாதசுந்தரனார் எழுதிய உரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது திருக்குறளைப் போலவே குறள் வெண்பா […]

Read more