2050–இல் பெண்கள்
2050–இல் பெண்கள், விஜிமா, வசந்தா பதிப்பகம், விலைரூ.300. கல்வி வாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் அவலம் துவங்கி, இன்றைய செழுமையான சூழலை விவரித்து, படிப்பறிவாலும், பட்டறிவாலும், விழிப்புணர்வும் நன்மதிப்பும் எய்தி வருவதை விளக்கிச் சொல்லும் நுால். கடந்த நுாற்றாண்டுகளில் பெரும்பான்மைப் பெண்கள், ஆண்களைச் சார்ந்து இல்லற இயந்திரமாகவும், போகப் பொருளாகவும் உழன்ற நிலைமை மாறி, உயர்ந்த வேலைவாய்ப்புகளால் செல்வாக்கு, எழுச்சி, முன்னேற்றம், தன் மதிப்பு உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, கல்வி வளர்ச்சியே பெண்களின் நிலையை புதிய தளத்துக்கு உயர்த்தி இருப்பதை முன்வைக்கிறது. […]
Read more