கந்தரலங்காரம் மூலமும் உரையும்

கந்தரலங்காரம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு மலர்களைக் கொண்டு, பூமாலை கட்டி அழகனுக்கு அணிவித்து அழகு செய்வது போல, முருகனின் பல செயல்களைக் கொண்டு செய்யுளால் அலங்காரம் செய்து அருணகிரிநாதரால் பாடப்பட்டது கந்தரலங்காரம். கந்தரலங்காரத்தில் முருகனுடைய அடி முதல், முடி வரை வருணிக்கப்பட்டுள்ளது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, யம பயம் நீங்குதல் போன்ற வாழ்வியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more