தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ.

இந்தியாவில் கொள்ளையர்கள் தடம் பதித்த காலக்கட்டத்தில், “தக்கர்” என்ற கொள்ளைக்காரர்கள் மத்திய இந்தியாவில் அட்டூழியங்கள் செய்து வந்தார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய செல்வங்களை கொள்ளையடித்தார்கள். பிற்காலத்தில், இவர்களை வெள்ளையர்கள் அடக்கினார்கள்.

3689 தக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 466பேர் தூக்கில் போடப்பட்டனர். 1504பேர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு தக்கர்கள் பற்றிய அபூர்வ விஷயங்களை, இரா. வரதராசன் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்

. ஒரு நாவலுக்கு உரிய விறுவிறுப்புடன் புத்தகம் அமைந்துள்ளது.

நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *