தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும்
தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும், “திருத்தம்” பொன். சரவணன், சைபர்நெட் சேவை மையம், விலை 200ரூ.
அகராதிகளில் காணப்படும் குற்றங்களையும், குறைகளையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார், நூலாசிரியர் “திருத்தம்” பொன். சரவணன். சில சொற்களுக்கு புதிய அர்த்தங்களை கூறுகிறார். ஆசிரியர் ஆராய்ச்சித்திறன் பாராட்டத்தக்கது. ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 15/6/2016.
—-
நேர்மையாக சிந்திப்போம் நன்மைகள் பெறுவோம், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாறுபட்ட எண்ணங்கள் இருக்கக்கூடும். இவ்வெண்ணங்கள் முரண்பட்டும் இருக்கும். இருப்பினும் எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்து நேர்மறை எண்ணங்களோடு தீர்மானிக்கப்பட்ட இலக்கை அடையவும், சுய முன்னேற்றத்தை அடையச் செய்வதற்கு சில மாறுபட்ட நேர்மறை சிந்தனைகளையும் கொடுத்திருக்கிறார் டாக்டர் எஸ்.ஜே. ஜகதீசன்.
நன்றி: தினத்தந்தி, 15/6/2016.