போராட்டம்
போராட்டம், முனைவர் பெ. சரஸ்வதி, காவ்யா, விலை 250ரூ.
இந்தி இலக்கிய உலகில் ‘பிரேம்சந்த்’ என்ற பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. முப்பதாண்டு கால அவரது இலக்கியப் பணியில் 12 நாவல்களையும், கிட்டத்தட்ட 300 சிறுகதைகளையும், 3 நாடகங்களையும் எழுதியுள்ளார்.
அவது படைப்புக்காகவே அவரது காலம் ‘பிரேம்சந்த் யுகம்’ என்று அழைக்கப்பட்டது. அவரது போராட்டம் என்ற நாடகத்தை தமிழில் முனைவர் பெ. சரஸ்வதி மொழிபெயர்த்துள்ளார். இந்த நாடகம் 93 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாய, பொருளாதார நிலையையும், மனித வாழ்வின் போராட்டத்தையும் நமக்குப் படம் பிடித்து காட்டுகிறது.
நாடக மாந்தர்கள் கிராமத்து மொழியில் பேசுவதைப் போல நாடகத்தை அவர் உருவாக்கியுள்ளார். அதே பாணியில் தமிழில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று கூற முடியாத அளவுக்கு சுவையும், சுவாரஸ்யமும் கொண்ட நாடகமாகும்.
நன்றி: தினத்தந்தி, 15/6/2016.