தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர்.இரகுநாதன்,  ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.240, விலை  ரூ.150.

தமிழ் இதழியல் குறித்து பல நூல்கள் வெளிவந்திருப்பினும், இந்த நூல் எழுத்தின் வரலாற்றில் தொடங்கி இன்றைய இதழியல் போக்குவரை அலசி ஆராய்ந்திருப்பது தனிச்சிறப்பு.

விடுதலைப் போரில் இதழ்களின் பங்களிப்பு முதல் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒருமைப்பாடு தினம் வரையிலான 20 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. தமிழ் இதழியல் முன்னோடிகளான திரு.வி.க., பாரதி, வ.உ.சி., சுப்பிரமணியசிவா, தினமணி ஏ.என்.சிவராமன், ராஜாஜி, புதுமைப்பித்தன் என அனைவரைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

மது விலக்கை வலியுறுத்துவதற்கென்றே “விமோசனம்’‘ எனும் இதழை ராஜாஜி தொடங்கி நடத்தியிருப்பதும், அதில் உதவி ஆசிரியராக கல்கி கிருஷ்ணமூர்த்தி பணிபுரிந்திருப்பது போன்ற பல தகவல்கள் வியக்க வைக்கின்றன.

தினசரி, வார இதழ்கள் என அனைத்தின் வளர்ச்சி, சிறப்பை விளக்கியிருக்கும் நூலாசிரியர், குறிப்பிட்ட சில நாளிதழ்களின் மொழி நடை உள்ளிட்ட சிலவற்றில் பழைய நிலையையே பதிவு செய்திருப்பது பெருங்குறை. 2015 இல் மூன்றாம் பதிப்பாக இந்நூல் வெளி வந்துள்ள நிலையில், தற்போதைய நாளிதழ்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய பகுதிகள் குறித்த தகவல்களைச் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சிற்றிதழ்களின் போக்கு, இணையதளங்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை இதழியல் வளர்ச்சியாக விவரிக்கும் நூலாசிரியர் தற்போதைய கணினி தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தையும் பதியத் தவறவில்லை. சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 6/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *