தமிழ்ச் சிறுகதை வரலாறு
தமிழ்ச் சிறுகதை வரலாறு, கி.துர்காதேவி, கி.ராஜம் வெளியீடு, விலை 225ரூ.
தமிழகத்தில் பிரசண்ட விகடன் என்ற இதழ், 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இதழில் 1935 முதல் அந்த இதழ் நிறுத்தப்படும் வரை ஆசிரியராக இருந்த எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் காலத்தில் அந்த இதழில் பல்வேறு சிறுகதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் 1951 முதல் 1952 வரை உள்ள ஓராண்டு காலத்தில் வெளியான சிறுகதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அந்த காலத்தில் வெளியான கதைகளின் சுருக்கம், அந்தக் கதைகளின் பாடுபொருள், கதைகளின் அமைப்பு ஆகியவையும் இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டு இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818