தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ.
மக்களுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி, “பொக்கிஷம்” என்ற பொதுத் தலைப்பில் ‘புத்தகங்களாக வெளியிடும் பணியை வடகரை செல்வராஜ் செய்து வருகிறார்.
அந்த வரிசையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புத்தகம், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள்”. இதில் சட்டப்போரவை நடைமுறைகள், சட்ட மன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் முதலிய விவரங்கள் அடங்கியுள்ளன.
தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் டெலிபோன் எண்களுடன் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 26/4/2017.