தமிழகப் பாளையங்களின் வரலாறு

தமிழகப் பாளையங்களின் வரலாறு, மு. கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலைரூ.150.

பாளையம் – பாலாமு என்ற தெலுங்கு சொல்லுக்கு, ராணுவ முகாம் என்று பெயர். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள். தென்தமிழகத்தில் குறிப்பாக, விசய நகரப் பேரரசு காலத்தில் பாளையங்கள் உருவாகின.

சிற்றரசர்களாகவே வலம் வந்தனர். ஊர் பரிபாலனம் முக்கிய கடமையாக இருந்துள்ளது. விசயநகர அரசர்கள், நாயக்கர்கள், நவாப்புகள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்பட்டும் மாறுபட்டும் நிலைநிறுத்திக்கொண்டனர். வரிப்பணம் செலுத்துவதும், வரி செலுத்தாமையும் நடந்துள்ளது.

பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு வரி மறுத்ததற்கான வரலாற்றுச்சான்று ஏதுமில்லை என்பதையும், வரி செலுத்த தவணை கேட்டார் என்பதையும் சான்றுகளோடு எடுத்துரைக்கிறார்.
ஆங்கிலேயர், பாளையங்களைத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததும், அத்தருணத்தில் ஜமீன்தார் முறை அமலாக்கப்பட்டதும் வரலாற்று நிகழ்வுகள். வரலாற்று ஆர்வலர்கள் மேலும் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் பயன்பாடுடையது.

– ராம.குருநாதன்‘

நன்றி: தினமலர், 16/5/21/

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194865360_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *