தந்தை பெரியாரின் 100 அறிவுரை
தந்தை பெரியாரின் 100 அறிவுரை, தொகுப்பு கவிஞர் கலி. பூங்குன்றன்,பெரியார் சுய மரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, விலை 15ரூ, விலை 10ரூ.
தமிழ்ச் சமுதாயத்துக்கு தந்தை பெரியார் வழங்கிய அறிவுரைகள் ஏராளம், ஏராளம். அவற்றில் 100 அறிவுரைகளை தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் கலி. பூங்குன்றன். உணவு பற்றாக்குறை தீர, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழிய, கலவரங்களைக் களைய, வகுப்பு வாதம் ஒழிய, ஒழுக்கம் வளர… இப்படி பல பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுகிறார் பெரியார்.
சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். விலை 15ரூ. “பெரியார் ஒரு வாழ்க்கை நெறி” என்ற நூலையும் தொகுத்துள்ளார் கவிஞர் கலி. பூங்குன்றன். விலை 10ரூ.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.