தி கிப்ட்
தி கிப்ட், தமிழில் கு. அழகிரிசாமி, ஆங்கிலத்தில் பட்டு எம். பூபதி, சாகித்ய அகாடமி, பக். 176, விலை 130ரூ.
கு.அழகிரிசாமி தமிழில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். ‘அன்பளிப்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமியின் விருதினைப் பெற்றவர். அந்த தொகுப்பினை பட்டு எம்.பூபதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
‘ராஜா ஹேஸ் கம்’ கதையில், தன் குழந்தைகளை அரவணைத்துப் போற்றும் ஏழையான தாயம்மாள், தன் குழந்தைகள் வயதை ஒத்த அநாதைச் சிறுவனிடம் அன்பைப் பொழிகிறாள். ‘எங்கள் வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்’ என்று பணக்கார நண்பன் இராமசாமி பீற்றிக்கொள்ளும்போது, தாயம்மாளின் குழந்தைகளின் ஒருத்தியான மங்கம்மா, ‘எங்கள் வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார்’ (அநாதைச்சிறுவனின் பெயர்) என்று சொல்லி இராமசாமியை மட்டம் தட்டுகிறாள்.
குழந்தை உலகத்தை இவ்விரு கதைகளிலும் அற்புதமாக காட்டியிருக்கிறார் கு.அழகிரிசாமி. மொத்தம், 12 கதைகளை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் பூபதி. மொழிபெயர்ப்பில் உண்மையான ஈடுபாட்டு உணர்வு தெரிகிறது. ஆங்கில நடையும் அருமையாய் உள்ளது.
-ராம.குருநாதன்
நன்றி: தினமலர், 26/6/2016.