தீண்டாமைக்குத் தீர்வு என்ன?
தீண்டாமைக்குத் தீர்வு என்ன?, ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பதிப்பகம், பக். 96, விலை 60ரூ.
இந்தியாவில் தீண்டாமை என்பது நீண்டகால விவாத பொருளாக இருந்துவருகிறது. அது இந்து மதத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. உண்மையில், இந்து மதத்தில் தீண்டாமை இல்லை.
ஞானிகள் அதை அங்கீகரிக்கவில்லை என, ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த கீழ்குலத்தவராக கருதப்பட்ட மாறநேர் நம்பியின் இறுதிச் சடங்குகளை செய்த பெரிய நம்பி, அவரை கடவுளான நம்பெருமாள் அங்கீகரித்தது, நந்தனார் வரலாறு, திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் வரலாறு, ஆதிசங்கரர் – புலையன் விவாதம், பல்வேறு ஆதாரங்களை நூலாசிரியர் முன்வைக்கிறார்.
விடுதலைக்கு பின்னர்தான், தீண்டாமை அதிகரித்தது. தாழ்த்தப்பட்டோர், சமண, பவுத்த மதங்களை பின்பற்றவில்லை. உயர்குடியினர் தாழ்த்தப்பட்டோரை கொடுமை செய்யவில்லை. எந்த ஜாதிப் பெயரும் இழிவானதல்ல. ஜாதிக் கொடுமைகளுக்கு ஆதிக்க மனோபாவம்தான் காரணம். அந்த மனோபாவம், ஊருக்கு ஊர், ஜாதிக்கு ஜாதி மாறுபடுகிறது என, பல்வேறு கருத்துகளை நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.
அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, மதத் தலைவர்களால்தான், தீண்டாமையை அகற்ற முடியும் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.
-ஜே.பி.
நன்றி: தினமலர், 8/5/2016.