திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்
திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
திரை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதர், நடிக மன்னன் பி.யு.சின்னப்பா, குணசித்ர நடிகர் டி.எஸ். பாலையா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். ஆர்.சி. சம்பத், முப்பெரும் நடிகர்கள் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார். சில பிழைகளையும் எடுத்துக்காட்ட வேண்டும்.
“சந்திரகாந்தா படத்தில், சுண்டூர் இளவரசன் வேடத்தில் கதாநாயகனாக பி.யு. சின்னப்பா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. சின்னப்பா ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்” என்று 15-ம் பக்கத்தில் கூறும் ஆசிரியர், அடுத்த பக்கத்திலேயே “சந்திரகாந்தா” வெற்றிப் படமாக அமையவில்லை என்றாலும் சினிமா ரசிகர்களிடையே பி.யு. சின்னப்பா என்ற கதாநாயக நடிகனை பரவலாக அறிமுகம் செய்தது” என்கிறார்.
சரியான தகவல் – “சந்திரகாந்தா”வில் காளி என். ரத்தினம் இரட்டை வேடங்களில் நடித்தார். படத்தின் பிரதான நடிகர் அவர்தான். படம் பெரிய வெற்றிபெற்றது. பி.யு. சின்னப்பா, சுண்டூர் இளவரசன் என்ற சிறிய வேடத்தில் நடித்தார்.
பி.யு.சின்னப்பாவை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய படம் “உத்தமபுத்திரன்” (1940). மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்தில், சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்தார்.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.