திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்
திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்; ஆசிரியர் : எடப்பாடி அழகேசன், வெளியீடு: மணிமேகலை பிரசுரம், விலை 750 ரூ.
உலக அற இலக்கியங்களுள் ஈர்ப்பு மிக்கது திருக்குறள். சாமானியர் வாழ்வில் நிகழும் நல்லவை, கேட்டவை அனைத்திற்கும் திருக்குறள் நெறிகளைப் பொருத்திப் பார்க்க முடியும். குறள் நெறிகள் எளிதாக மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரத்திற்கும் ஒரு கதையென, 133 சிறுகதைகளின் தொகுப்பாக வந்திருக்கும் நுால்.வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நீண்ட கதைகளாக்கித் திருக்குறள் அதிகாரங்களோடு பொருத்திக் கூற முனைந்திருக்கிறார். எளிய நடையில் அமைந்திருக்கின்றன. குறள் நெறிகளைக் கூற விழைந்தது நல்ல முயற்சி. கதைக்களங்கள் பொதுவாக எல்லார் வாழ்விலும் நடப்பவையே. இயல்பு நடையில் எளிய உரையாடலுடன் அமைந்துள்ளன.
வான் சிறப்பு, அருளுடைமை, இறைமாட்சி, செங்கோன்மை, கொடுங்கோன்மை, நட்பு போன்ற அதிகாரங்களை மையக்கருத்தாக கொண்டு, மேலும் சிறந்த கதைக் கருக்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
– மெய்ஞானி பிரபாகரபாபு.
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030002_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818