தொ.ப.வும் நானும்
தொ.ப.வும் நானும், முனைவர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக் ஹவுஸ், விலைரூ.80.
சமீபத்தில் மறைந்த பிரபல பேராசிரியர் தொ.பரமசிவனுடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
முதலில் சந்தித்ததில் இருந்து, பழக்க வழக்கங்கள், நற்பண்புகள், வழிகாட்டல்கள், அதன் மூலம் கற்றவை, குடும்ப சந்திப்புகள் என, பலவித நினைவுகளை எளிமையாக எழுதியுள்ளார். மிகவும் நுட்பமாக பதிவாகியுள்ளன. சுவாரசியம் தருகிறது.
இலக்கிய சுவையுடன் திகழ்கிறது. இரு பிரபலங்களிடையேயான சந்திப்பு, உரையாடல்கள் படிப்பினை தரும் வகையில் உள்ளது. அரிய அனுபவப் பதிவு நுால்.
நன்றி: தினமலர், 2.5.21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818