சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்

சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்,  நா.கவிதா,  ஏ.எம்.புக் ஹவுஸ்,  பக்.290,   விலைரூ.270. “மக்கள் இலக்கியம்’ என்று கூறப்படும் சிற்றிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த சமுதாயச் சூழலை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் உள்ளன என பலரும் குறிப்பிடப்பட்டு வரும் சூழலில், அவற்றின் எண்ணிக்கை 300-க்கும் மேற்பட்டதாக உள்ளது என தனது கருத்தை முன்வைக்கும் நூலாசிரியர், அவற்றில் சமுதாயவியல் நோக்கத்துக்கு துணை புரியும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், சதகம் ஆகிய நான்கு சிற்றிலக்கிய வடிவங்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். “குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் கொண்டும், […]

Read more

ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள்

ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள், எஸ்.ஏ.பெருமாள், ஏ.எம்.புக் ஹவுஸ், விலைரூ.160. ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள், அதன் நோக்கங்கள் என 15 தலைப்புகளில் பதிவு செய்து உள்ள நுால். சான்றாக, மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில், ‘தொழிலாளர்களிடம் ஒரு மகாசக்தி மறைந்து கிடக்கிறது. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்களது மதிப்பையும் சக்தியையும் அவர்களை உணரச்செய்ய வேண்டியதே முக்கியம். அதை உணர்ந்துவிட்டால் அவர்கள் உடனே சுதந்திரமாக வளர்ச்சி பெறத் துவங்குவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஏழைத் தாயைக் கதாநாயகியாக்கி எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் […]

Read more

தொ.ப.வும் நானும்

தொ.ப.வும் நானும், முனைவர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக் ஹவுஸ், விலைரூ.80. சமீபத்தில் மறைந்த பிரபல பேராசிரியர் தொ.பரமசிவனுடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. முதலில் சந்தித்ததில் இருந்து, பழக்க வழக்கங்கள், நற்பண்புகள், வழிகாட்டல்கள், அதன் மூலம் கற்றவை, குடும்ப சந்திப்புகள் என, பலவித நினைவுகளை எளிமையாக எழுதியுள்ளார். மிகவும் நுட்பமாக பதிவாகியுள்ளன. சுவாரசியம் தருகிறது. இலக்கிய சுவையுடன் திகழ்கிறது. இரு பிரபலங்களிடையேயான சந்திப்பு, உரையாடல்கள் படிப்பினை தரும் வகையில் உள்ளது. அரிய அனுபவப் பதிவு நுால். […]

Read more