சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள்
சமுதாயவியல் நோக்கில் சிற்றிலக்கியங்கள், நா.கவிதா, ஏ.எம்.புக் ஹவுஸ், பக்.290, விலைரூ.270.
“மக்கள் இலக்கியம்’ என்று கூறப்படும் சிற்றிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த சமுதாயச் சூழலை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் உள்ளன என பலரும் குறிப்பிடப்பட்டு வரும் சூழலில், அவற்றின் எண்ணிக்கை 300-க்கும் மேற்பட்டதாக உள்ளது என தனது கருத்தை முன்வைக்கும் நூலாசிரியர், அவற்றில் சமுதாயவியல் நோக்கத்துக்கு துணை புரியும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், சதகம் ஆகிய நான்கு சிற்றிலக்கிய வடிவங்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
“குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் கொண்டும், எண் வகை யாப்பினாலும், குறிப்பிட்ட அமைப்பு நிலையினாலும் படைக்கப்பெறும் இலக்கிய வகையே சிற்றிலக்கியம்’ என சிற்றிலக்கியங்களின் சிறப்பியல்புகள் குறித்து தா.ஈசுவரப்பிள்ளை அளித்த விளக்கம் உள்பட பல அறிஞர்களின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் அரசர்களின் போர் வீரம், கொடைத்திறன் இவற்றைச் சிறப்பித்துப் பாடிய சிற்றிலக்கியங்கள் பின்னர் கடவுளர், அடியவர், நிலக்கிழார் ஆகியோரைப் பாடியதோடு சாதாரண மக்கள் வாழ்க்கையினையும் பாடுபொருளாக ஏற்றன.
“சிற்றிலக்கியங்கள் தோன்றிய கால கட்டத்தில் நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் நில உரிமையாளர்கள் உழைக்கும் பிரிவினரைப் பல நிலைகளில் சுரண்டி அடிமைகளாகவே நடத்தினர். விவசாய உழைப்பாளர்கள் யாவரும் முழுக்க முழுக்க பண்ணைஅடிமைகளாக மாற்றம் பெற்றனர். கிராமங்களில் பாடுபட்டு பயிர்ச் செலவு செய்கிற விவசாயிக்கு ஐந்தில் ஒரு பங்கும், புன்செய் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கும்தான் கிடைத்தது’ என்பதை வாசிக்கும்போது அப்போதும் இப்போதும் விவசாயிகளின் கனவு கனவாகவே இருப்பதை உணர முடிகிறது.
சிற்றிலக்கிய காலச் சமுதாயத்தில் நிலவிய வாழ்நிலையை அறிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவுகிறது.
நன்றி: தினமணி, 14/2/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818