எனது வாய்மொழி பதிவுகள்
எனது வாய்மொழி பதிவுகள், கி. ராஜநாராயணன், அன்னம், பக்.316, விலை ரூ. 300.
எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் மறைவுக்குப் பிறகு அவருடைய பெயரில், முதல் பதிப்பாக வெளிவரும் கி.ரா.வின் புத்தம் புதிய நூல் என்ற அறிமுகத்துடன், வெளிவந்துள்ள புத்தகம் இது.
எனது வாய்மொழி பதிவுகள் என்பதாகத் தலைப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கி.ரா. அளித்த நேர்காணல்களின் தொகுப்புதான் இந்த நூல், எழுத்தாளர் கழனியூரன் தொகுத்தவை (கழனியூரனும் காலமாகிவிட்டார்).
விலாவாரியாகச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் கேட்கப்படுகிற கேள்விகளுக்குக் கூட மிகக் கூராக, ஒற்றை வரியில் பதிலளிப்பதில் தெரிகிறது, “ராஜ’பார்வை.
“எந்த விஷயம் இல்லாமல் கி.ரா. இல்லை?’ என்ற கேள்விக்கு, “உயிர்தான், வேறென்ன?’ என்று வாய்விட்டுச் சிரிக்கிறார் அவர்.
“டிக்கெட் எடுத்தாச்சி – ரெயிலுக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தலைப்பிட்ட முதல் நேர்காணலில்- 2016-இல் ஒளிவடிவில் வந்தது- தன் மரணத்தைப் பற்றியதான கி.ரா.வின் கருத்துகள், இன்று அவர் இல்லாத நிலையில் சங்கடப்படுத்துபவை.
வழக்கமாக, தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒப்புமை தொடர்பான ஒரு கேள்விக்குச் சிறப்பான தீர்வைக் கி.ரா. சொல்கிறார்: “புதுமைப்பித்தன் பூமிக்கும் வானத்துக்கும் உயர்ந்து பரந்து நிற்கும் ஜடாமுனி, அழகிரிசாமி ஒரு குளுமையான இளந்தென்றல் காற்று. இருவருமே பேசப்பட்டவர்கள்தான். அதன் போக்கு வேறு, இதன் போக்கு வேறு.’
பொதுவாகப் பலரால் முணுமுணுக்கப்படும் தன்னுடைய பாலியல்சார் எழுத்துகள் தொடர்பாகக் கூட தெளிவாகவும் விரிவாகவும் விளக்கங்களைத் தருகிறார் கி.ரா.
அவரை வாசிப்பவர்கள் மட்டுமின்றி, அனைவருமே படிக்க வேண்டிய விஷயங்கள் நூலில் நிரம்பி வழிகின்றன.
கழனியூரன் காலத்துக்குப் பிந்தைய கி.ரா.வின் நேர்காணல்கள் மற்றும் வாய்மொழிப் பதிவுகள் போன்ற சங்கதிகளை அடுத்துவரும் பதிப்பில் இணைக்க முயன்றால் கி.ரா.வைப் போலவே இந்த நூலும் நிறைவைப் பெறும்.
நன்றி: தினமணி, 14/2/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818