டொரினா
டொரினா, கார்த்திக் பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், விலை 100ரூ.
புதிய களத்தில் புதிய கதைகள்
கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் தொகுப்பான டொரினாவிலுள்ள 12 கதைகளும் எளிய கதைகள் அல்லது 12 உண்மைகள். வீட்டைவிட்டு வெளியேறிய சொந்தங்கள், யோசிக்காமல் எதிர்வினையாற்றுபவர்கள், துணை இழந்த முதியவர்கள் என நமக்குத் தெரிந்திருக்கும் ஜீவன்கள்தான் இத்தொகுப்பின் பாத்திரங்கள்.
பின் ஏன் டொரினா? ஏனென்றால், நம்மிடமிருந்து பிரிந்தவர்கள், தொலைத்தவர்களை, நினைவுகளின் ஓரத்தில் கிடக்கும் விஷயங்களை எடுத்துவந்து நம் முன் நிறுத்துகிறது. இத்தொகுப்பின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் முக்கியமானவை. ஐடி துறையில் வேலைபார்க்கும் பெண்கள் எத்தகைய மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
அங்கே உணர்வுகளுக்கு என்ன மரியாதை என்பதை உண்மையாகப் பேசுகிறது. ஐடி சார்ந்து நம்மிடையே உருவாகியிருக்கும் பொதுபிம்பத்தை இக்கதைகள் உடைக்கின்றன.
-சங்கரநாராயணன்.
நன்றி:தி இந்து, 6/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818