உலகத் திரைப்படம்
உலகத் திரைப்படம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 225ரூ.
ஆக்கப்பூர்வமான திரைப்படங்கள் உயர்ந்த இலக்கியங்கள் என்ற அளவில் போற்றப்பட வேண்டியவை. அந்த வகையில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படங்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்தும், அவர்களது படைப்புகள் பற்றியும் ஆய்வு நோக்கோடு டாக்டர் வெ. சுங்பபிரமணிய பாரதி அலசி ஆராந்துள்ளார். விசித்திரமான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், அதிர்ச்சிகரமான காட் மாற்றங்கள் என ஒரு வித்தியாசமான கோணத்தில் உலக சினிமாவை மக்கள் மத்தியில் உலவவிடுகிறார்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.
—-
எது சாதனை?, அழகு பதிப்பகம், விலை 250ரூ.
எது சாதனை? பிறர் செய்ய முடியாத கடினமான ஒரு செயலை ஒருவர் வெற்றிகரமாக செய்து முடிப்பது சாதனை எனப்படுகிறது. அதே சமயம் அது மக்களுக்கு பயன்படும் விதமாகவும் இருக்க வேண்டும். ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம், தொழில்நுட்பம், இசை, மருத்துவம், தொழில்கள் என்று பலவகையான துறைகளில் இளைஞர்கள் சாதித்த சாதனைகளைப் பற்றி விளக்கம் அளிக்கும் இந்நூல், ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் செயல்பட நினைப்போருக்கு உற்ற நண்பனாக திகழும். இதை பயனுள்ள வகையில் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் கே.ராஜகோபாலன்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.