உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு
உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிரினம் தோன்றியது எவ்வாறு என்பதை ஆய்வு நோக்கிலும், அதே சமயம் அறிவியல் துறையைச் சாராத சாமானியர்களும் தெரிந்துகொள்ளும் வகையிலும் இந்த நூல் தயாராகி இருக்கிறது.
உயிரினம் தோன்றியது குறித்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய கருத்துக்கள் முதல் தற்காலத்தில் செயற்கையாக உயிரை மனிதன் படைத்தது வரையிலான தகவல்கள் எளிய நடையில் தரப்பட்டு இருக்கின்றன.
பிக் பேங் எனப்படும் பெரு வெடிப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் கத்தோலிக்க அர்ச்சகர் ஒருவர் என்பதும், மனித செல்கள் பற்றிய டி.என்.ஏ. என்பது 1871-ம் ஆண்டு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் போன்ற வியப்பான செய்திகள் இந்த நூலில் ஏராளம் இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 18/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818