வால்காவிலிருந்து கங்கை வரை
வால்காவிலிருந்து கங்கை வரை, ராகுல சாங்கிருத்தியாயன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 400ரூ.
இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், ரஷியாவிலிருந்து பாய்ந்தோடும் நதி வால்கா. இது 9,690கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
இந்த நதிக்கரையில் வசித்தவர்கள்தான் இந்தோ – ஐரோப்பிய இனத்தவர்கள் (ஆரியர்கள்). இவர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளில் மெல்ல மெல்ல நகர்ந்து, சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் (இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்புறத்தில்) குடியேறினர். இந்தக் காலக்கட்டத்தில் (கி.மு. 6000 ஆண்டு முதல் 1942 வரை) மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை சித்தரிக்கும் வகையில் 20 கதைகளை இந்தியில் எழுதினார், ராகுல் சாங்கிருத்தியாயன்.
இவர் பல மொழிகளை அறிந்தவர். இந்த 20 கதைகளையும் ஒன்றாக இணைத்து நாவலாக்கினார். இதை அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார், டாக்டர் என். ஸ்ரீதரன். 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த நாவலை பொறுமையுடன் படித்தால், ஒரு சிறந்த இலக்கியத்தை படித்த மகிழ்ச்சியைப் பெறலாம். இந்த நாவல் பேரறிஞர் அண்ணாவின் பாராட்டுதலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.