விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்
விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை 120ரூ.
காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் பூர்வ குடிமக்களான பழங்குடி இனத்தவர்கள், இந்திய வரலாற்றில் கவனிக்காமல் விடுபட்ட நிலையிலும், அவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது.
சாந்தல்கள் என்னும் பழங்குடி இன மக்கள் வில் அம்புகளை மட்டுமே ஆயுதங்களாக வைத்துக் கொண்டு நான்கு ஆண்டு காலம் ஆங்கிலேய படைகளை எதிர்த்துப் போராடினார்கள் என்ற வியப்பான தகவலை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டம், ஆகஸ்டு புரட்சி ஆகியவற்றில் கலந்து கொண்ட பழங்குடி மக்கள் பற்றிய செய்தி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.
நன்றி: தினத்தந்தி, நவம்பர், 2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818