அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள்
அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள், யு எஸ் எஸ் ஆர் நடராசன், பத்மா பதிப்பகம், 21/10, லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 160ரூ.
60 அறிஞர்களின் பொன்மொழிகளை தேர்வு செய்து, அவற்றை அடிப்படையாக வைத்து கருத்தாழம் உள்ள 60 கட்டுரைகளை எழுதியுள்ளார் யு எஸ் எஸ் ஆர் நடராசன். கடந்த 60 ஆண்டு கால வாழ்க்கைப் பாதையில் நான் சந்தித்த நிகழ்வுகள், தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பயின்ற நூல்கள், வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தனது ஆழ்ந்த கருத்துக்களை 60 தலைப்புகளில் அனைவருக்கும் பயனளிக்கின்ற வகையில் எழுதி வெளியிட்டிருக்கிறார் நடராசன் என்று அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டிருபபது சரியான கணிப்பு. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.
—-
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், தொகுப்பு- ச. தில்லை நாயகம், சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 155ரூ.
தமிழ் எழுத்துலகில் நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் என பல துறைகளில் தன் படைப்புதிறனை வெளிப்படுத்திய சுந்தர ராமசாமியின் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளின் தொகுப்பு இது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நூலின் ஆசிரியர் தன்னையும், சமூகத்தையும், படைப்பாளிகளையும் ஆய்வு செய்து கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இறுதியில் சமகால அரசியல் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளை பாராட்டி அவற்றை பின்பற்ற இளம் தலைமுறையினருக்கு சிபாரிசு செய்யும் அதே ஆசிரியர், அதே நேரம் போலி முகங்கள் என்ற கட்டுரை மூலம் படைப்பாளிகளின் குறைகளை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. இலக்கிய துறையில் படைப்பாளிகளாக உருவாகி வரும் இளம் தலைமுறையினருக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.