அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள்

அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே) சென்னை 108, விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-1.html

லதா ரஜினிகாந்த் எழுதிய சிறந்த புத்தகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா, கல்வி மீது ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிக்கும் நோக்கத்துடன் ஆஷ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு சிறந்த புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் கூறும் சில கருத்துக்கள்- ஆங்கிலேயருக்குப் பொருந்திய ஒரு கல்வித்திட்டம் நம் நாட்டு பின்னணிக்கும், சூழலுக்கும் பொருந்தவில்லை. இன்று பாடப்புத்தகங்களைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு ஒரு வெறுப்பு. அதை எடுத்துப்பார்க்க ஒரு தயக்கம். நாம் கல்வியை நோக்கும் விதம், அணுகும் முறை எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் காணவேண்டும். நம் குழந்தைகளுக்காக, நம் சிறிய மனிதர்களைச் சுற்றி ஓர் இன்பமான, பயனுள்ள கல்விச்சூழல் உருவாக வேண்டும். இவ்வாறு கூறும் லதா ரஜினிகாந்த் தன் கருத்துக்கு வலுவான வாதங்களை முன்வைக்கிறர்ர். சிந்தனைக்கு உரிய, ஆக்கபூர்வமான நூல். நன்றி; தினத்தந்தி.  

—-

 

தலைவர்களின் வரலாறு, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49.

தேசத் தலைவர்களின் வரலாற்றை சுருக்கமாகவாவது ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அதை உணர்ந்து, தலைவர்களின் வரலாற்றை சங்கர் பதிப்பகம் சிறு சிறு புத்தகங்களாக 10ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி, அம்பேத்கார், டாக்டர் ராதாகிருஷ்ணன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோருடைய வாழ்க்கை வரலாறுகள் இப்போது வெளிவந்துள்ளன. புத்தகங்களை சிறப்பாக எழுதியிருப்பவர் என். ரமேஷ்.  

—-

 

திருக்குறள் எளிய உரை, டாக்டர் கே.என். சரஸ்வதி, பேராசிரியர் பால.அர்த்தநாரீசுவரன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.

திருக்குறள் எளிய உரை நூல், ஏறக்குறைய ஓலைச்சுவடி வடிவத்தில் வெளியிட்டுள்ளது. உரை எளிமையாக உள்ளது. நன்றி; தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *