உறவுகள்
உறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ.
உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் இல்லையேல், குடும்ப வாழ்க்கை இல்லை. உறவுகள் இல்லையேல் சமூக வாழ்க்கை இல்லை” என்று ஆசிரியர் கூறும் கருத்து முற்றிலும் உண்மை. படிக்கவும் ரசிக்கவும் சிந்திக்கவும் உகந்த நூல். சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.
—-
நக்கீரன் இயல் புக் 2016, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ.
போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு பயன்படும் விதத்தில் 2016ம் ஆண்டுக்கான இயர் புக் இது. இதில் பொது அறிவு, முக்கிய தகவல்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மற்றும் முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2015ம் ஆண்டில் உலகம், இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டள்ளன. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இது ஒரு தகவல் பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.