உழைப்பின் நிறம் கருப்பு
உழைப்பின் நிறம் கருப்பு, ஆரிசன், தளிர் பதிப்பகம், சாத்தூர், பக். 112, விலை 100ரூ.
அருகில் வரும் வானம் நுட்பமான மன உணர்வுகளைச் செறிவாக மொழியில் சிற்சில சொற்களில் எழிலுறச் சித்தரித்தல் ஹைக்கூ கவிதையின் சிறப்பு. அவ்வகையில் ஆரிசன் எழுதியுள்ள உழைப்பின் நிறம் கருப்பு எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வித்தியாசமான பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. உலகமயமாதல், இயற்கையை நேசித்தல், உழைப்பின் மேன்மை ஆகிய தளங்களில் கவிஞரின் பார்வை சிறகடித்துப் பறப்பதைக் காணலாம். தவிர தினந்தோறும் அலுக்காமல் சலிக்காமல் உழைக்கும் அந்த வர்க்கத்துக்காக ஆரிசன் குரல் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ரசிக்கத்தக்க கவிதைகளாகப் பின்வருபவற்றைக் குறிப்பிடலாம். இறக்கைகளை அசைக்க அசைக்க அருகில் வருகிறது வானம். ஊதிய உயர்வு கேட்டு அர்ச்சகர்கள் போராட்டம் கல்லாக சாமி. வறண்ட பூமிக்கு வேரூன்ற வருகிறது மழை. -உமா சக்தி. நன்றி: கல்கி, 29/6/2014.
—-
அடுப்படியே ஒரு மருந்தகம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 155ரூ.
வெள்ளைப்பூண்டு சாப்பிட்டால், அது ரத்த உறைவைத் தடுக்கும். இஞ்சி சாப்பிடுவோருக்கு இதய நோய் ஏற்படுவது இல்லை. மஞ்சள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்களை எடுத்துக்கூறுகிறார் ச.சிவ. வல்லாளன். நன்றி: தினத்தந்தி, 25/6/2014.