கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?
கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?, குழந்தைகள் திரைப்படங்கள், ஸ்ரீரசா, கடவு வெளியீடு, விலை 100ரூ.
நுண்ணிய உலகம் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் உண்மையில் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல. பெரியவர்களுக்கும்தான். அதுபோன்ற 19 திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல். மதுரையில் தமிழ்நாடு குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் சார்பாக 2014ஆம் ஆண்டு திரையிடப்பட்ட படங்களைப் பற்றி நூலாசிரியர் தீக்கதிர் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வாட்ஜ்தா என்ற சௌதி அரேபியாவில் உள்ள 11 வயது சிறுமியின் கனவுகளைச் சொல்லும் படமே பெண்ணியப்பார்வையிலும் பலவிஷயங்களைச் சொல்வதாக இருக்கிறது. சைக்கிள் ஓட்ட ஆசைப்படும எளிய சிறுமி வழியாக அது திறக்கும் உலகம் மனித மாண்புகளைக் கிளருவது. இதுபோல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள். குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை திணிப்பதை விளக்கும் கோமல் என்கிற பிரச்சாரப்படம், சுவாரசியமான கற்பனைவாதப் படங்கள், குழந்தைகளின் நுண்ணி உலகைக் கூர்மையாகக் காட்டும் படங்கள் என பல்வேறு வகைகளைச் சேர்ந்த திரைப்படங்கள் பற்றி இந்த நூலில் அழகிய நடையில் விவரிக்கிறார் நூலாசிரியர் ஸ்ரீரசா. -மதிமலர். நன்றி: அந்திமழை, 1/2/2016.