கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள், பெ. கு. பொன்னம்பல நாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 108, பக்கம்: 112, விலை: ரூ. 50.

தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுவாமிகளின் உரைகள் , பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்; சிலரை சிந்தித்து திருத்தவும் செய்யும். இந்நூலில் அவர் குறித்து, 16 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் தேனாக இனிக்கின்றன. மரபியல் குறித்த செய்திகளும் (பக். 21), செஞ்சொல் உரைக் கோவைத்தேன் எனும் கட்டுரையும் படித்துப் பயனடைய வேண்டிய பகுதி. நாத்திகரும் இந்நூல் படித்தால் ஆத்திகர் ஆவர். – டாக்டர் கலியன்சம்பத்து.  

மனோரமா இயர்புக் 2013, விலை: ரூ. 130.

இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பை எதிர்கொள்ள தேர்வுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கும் உதவும் நூல். பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய தகவல்களுடன், ‘பிரிட்டானிகா 2013’ குறும் கலைக்களஞ்சிய ‘சிடி’ யும் இணைப்பாக இருப்பது சிறப்பாகும்.  

இயர்புக் – 2013 – நக்கீரன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை – 600 014, விலை: ரூ. 110.

ஆங்கில மொழியில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த ‘இயர்புக்’ என்ற பொது அறிவு குறித்த வெளியீடுகள், சமீப காலமாக தமிழிலும் வெளிவரத் துவங்கியுள்ளன. அந்த வரிசையில், இந்த ‘இயர் புக்’ கும் வெளியாகியுள்ளது.  

ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறும் – அற்புதங்களும், பேராசிரியர் அருட்கவி கு. செ. ராமசாமி, ஆர். பாலசுப்ரமணியம் ஸ்ரீ வீரபத்திரர் இல்லம், 555 / 2, பெருமாள்பட்டு கிராமம், சோழபுரம் போஸ்ட், சிவகங்கை – 630 0561.

சிலிர்ப்பூட்டும் ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறு. இதிகாச – புராண – இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து வீரபத்திரர் வரலாற்றை ஆசிரியர் எழுதியிருக்கிறார். சில சமஸ்கிருத சுலோகங்களையும், கவிதைகளையும் புதிதாகப் புனைந்துள்ளார். சிவகங்கை நகர், கோட்டப்பத்து அகமுடையர் எட்டு வீட்டுப் பங்காளிகளின் குலதெய்வமான வீரபத்திரர் கோவில், மேலரதவீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு மத்தியில் உள்ளது. நன்றி: தினமலர் (7.4.2013).  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *