சட்டச் சொல் அகராதி
சட்டச் சொல் அகராதி, வீ. சந்திரன், புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ.
நீதிமன்றங்களில் வழக்காடும் தமது வக்கீல்கள் என்ன சொல்லி வாதாடுகிறார்கள் என்பது குறித்து அந்த வழக்குக்கு உரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது சட்டத்துறையில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியின் காரணமாக, சட்ட நுணுக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் சட்டக்கலை சொற்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர் வீ. சந்திரன்.
—-
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, மா. இராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 100ரூ.
தமிழ் உரைநடை, இருபதாம் நூற்றாண்டில் எத்தனையோ மாறுதல்களைச் சந்தித்து இருக்கிறது. ஆரம்பத்தில், வடமொழி கலப்படம் அதிகமாக இருந்தது. படிப்படியாக மணிப்பிரவாளநடையில் மாற்றம் ஏற்பட்டு, நல்ல தமிழில் எழுதுவோர் எண்ணிக்கை அதிகமாயிற்று. பாரதியார், மறைமலையடிகள், திரு.வி.கல்யாணசுந்தரனார், பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன், வடுவூர் கே. துரைசாமி அய்யங்கார், வ. ராமசாமி (வ.ரா,) உள்பட தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நடைகளை மேற்கோள் காட்டி இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரை நடை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்டுகிறார் மா. இராசமாணிக்கனார். இலக்கிய ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 8/2/2012.
—-
கனாக்கண்டேன், கவிஞர் அரிமா இளங்கண்ணன், கலைவாணி பதிப்பகம், 32, தாணா தெரு, புரசைவாக்கம், சென்னை 7, விலை 45ரூ.
கனவு என்பது அரைகுறையான அனுபவங்களும் அவை பற்றிய நினைவுகளும் அரைகுறைத் தூக்கத்தில் வருவதாகும். கனவாராய்ச்சியில் தொடங்கி, கனவு பற்றிய பல்வேறு அறிஞர்களின் அனுபவங்களையும் இலக்கியச் சான்றுகளையும் அருமையாகத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் அரிமா இளங்கண்ணன். நன்றி: தினத்தந்தி 8/5/2013.