ஜப்பானில் அருணகிரி
ஜப்பானில் அருணகிரி, அருணகிரி, கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ.
உலகம் சுற்றும் வாலிபன், வாங்க பறக்கலாம், அந்தமானில் அருணகிரி, உலக வலம், ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, அலைந்தும் அறிந்ததும் என சுற்றுலா நோக்கில் பயனுள்ள நூல்களை அளித்து இருக்கின்ற நூலாசிரியர் அருணகிரியின் மற்றொரு புதிய பயண நூலிது. அருணகிரியின் பயணங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம், துல்லியமான திட்டமிடுதல், செல்லும் நாடு குறித்த தகவல்களை திரட்டுவது, முன் சென்று வந்தோர் அனுபவங்களைச் சேமித்து கொள்வது, பார்க்க வேண்டிய ஊர்களையும் இடங்களையும் சரியாகத் தீர்மானிப்பது, இயன்றவரை செலவைச் சிக்கனப்படுத்துவது, நுழைவு உரிமை விண்ணப்பங்கள், பணப் பரிமாற்றம், பயணச்சீட்டுகளை முறையாகத் திரட்டிக் கொள்வது என்பனவெல்லாம் அருணகிரியின் சொந்த அனுபவங்கள் மூலம் நமக்கு கற்றுத் தரப்படுகின்றன. தமிழர்கள் அறிய வேண்டிய – உணர வேண்டிய – பின்பற்ற வேண்டிய செய்திகளைச் சொல்லுவது, அருணகிரியின் நோக்கம். ஜப்பான் நாட்டின் வரலாறு, மக்களுடைய வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் குறித்த அரிய தகவல்களை அலங்காரம் இல்லாத, செறிவான தள்ளுதமிழ் நடையில் நமக்கு பாடம் நடத்துகிறார். இந்நூல் திசைகளைத் தழுவும் தமிழனின் உலா நூல். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.