தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள்
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள், இரா. வெங்கடேசன், இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 136, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-012-8.html
செவ்வியல் வரலாறுகளைக் கூறும் நூல்கள் வெளிவரும் சூழலில், செவ்வியல் இலக்கிய, இலக்கண நூல்கள் உருவான வரலாற்றை விரிவாகக் கூறும் நூல் இது. பண்டிதர்களின் வீட்டுப் பரண்களில் தூங்கிக் கொண்டிருந்த பழந்ததமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர் சி.வை. தாமோரம் பிள்ளை, உ.வே.சா. முதலான தமிழ்ச் சான்றோர்கள் செய்த முயற்சிகள் எண்ணற்றவை. தமிழ்ப் பெரியோர்கள் அயராத முயற்சி செய்து ஓலைச் சுவடிகளிலிருந்து படி எடுத்து அதில் எழும் ஐயங்களை மேலும், பல சுவடிகளைக் கெண்டு ஆராய்ந்து, செம்மையான முறையில் பதிப்பித்தனர். பிறது அதில் வெளியான பிழைகளை மீண்டும் திருத்தி செம்மைப்படுத்தி பதிப்பித்தது இன்று நாம் ரசித்துப் படிக்கும் நிலைக்கு உருவாக்கப்பட்டவையே நம் பழந்தமிழ் இலக்கியங்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 1863ஆம் ஆண்டு பி.ஏ. பட்டப் படிப்பு மாணவர்களுக்காக சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் (கானல் வரி) பகுதியை முதன் முதலாக ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பித்த தி.ஈ.ஸ்ரீநிவாஸராகவாச்சாரியார், சிலப்பதிகாரத்தை உரையுடன் பதிப்பித்து செம்மைப்படுத்திய உ.வே.சாமிநாதையர், தொல்காப்பிய பொருளதிகாரம் இளம்பூரணர் உரையை முழுவதுமாக முதன்முதல் வெளியிட்ட வ.உ.சி. 1857ல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையை பதிப்பித்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராய பண்டிதர் என தமிழறிஞர்களின் பதிப்புச் செயல்பாட்டை ஆய்கிறது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் இதுவரை வந்துள்ள அந்நூலுக்கான பதிப்புகளின் பட்டியலை இணைத்துள்ளது சிறப்பு. தமிழ் செவ்வியல் நூல்கள் இதுவரை உருவாகி வந்த வரலாற்றை விரிவாக ஆராயும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 5/11/2012.
—-
ஸ்ரீ காஞ்சி மஹிமை, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், பக். 184.
கோவில்கள் நிறைந்த நகரம் காஞ்சி. அதன் புகழை புராணங்கள், தெளிவாகக் கூறுகின்றன. காஞ்சி காமாட்சி அம்மனை தொடர்ந்து வழிபட்ட நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், இந்த நூலை தொகுப்பதில் அதிக ஈடுபாடு காட்டி, சிறப்பாக மலரச் செய்திருக்கிறார். இதில், காஞ்சி முனிவர் பற்றிய தகவல்களும், வண்ணப்படங்களும் ஏராளமாக உள்ளன. நன்றி: தினமலர், 4/5/14.