நலமா? நலமே!

நலமா? நலமே!, மருத்துவர் வே. வீரபாண்டியன், பிளாக் ஹோல் மீடியா, பக். 120, விலை 100ரூ.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ, மாண்புடன் வாழ, அனைத்துச் செய்திகளையும், எளிமையாகவும், விரிவாகவும் தந்துள்ளார் நூலாசிரியர். நலமாய் வாழ்வதற்கான அன்றாட வாழ்வியல் முறைகளான நடைபயிற்சி, விரல் முத்திரை பிடிப்பது, மூச்சுப்பயிற்சி, ஆசனம், சூரிய வணக்கம், உடற்பயிற்சி, இயற்கை உணவு மற்றும் மாற்று மருத்துவம், சுயபரிசோதனை என்று ஒவ்வொரு தலைப்பிலும் விவரமாக எடுத்துச் சொல்கிறார். நடைபயிற்சியின்போது அணிய வேண்டிய காலணிகள், முத்திரைகள் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை, ஆசன வகைகளின் நிலைகள், தினசரி உணவில் இடம்பெற வேண்டிய உணவுப்பட்டியல் என்று நுணுக்கமான செய்திகளையும் சுட்டிக் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தன் சொந்த அனுபவங்களையே குறிப்புகளாக தந்துள்ளது கவனிக்க வைக்கிறது. மொத்தத்தில் தான் புத்தகத்தில் சொல்லியவற்றை கடைப்பிடித்தால் நிச்சயம் நலம் பெறலாம் என்று உத்தரவாதமாகச் சொல்கிறார். நலம் வேண்டாம் என்று யாராவது சொல்வரா என்ன? -ஸ்ரீநிவாஸ் பிரபு. நன்றி: தினமலர், 27/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *