நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும்

நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 100ரூ.

ஆயிரம் பிறைகண்ட ஆரூர்தாஸ், ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்தவர். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பட அதிபர்களுடன் நெருங்கிப் பழகியவர். திரை உலகம் பற்றிய விவரங்கள் இவர் விரல் நுனியில் இருக்கும். ஏ.பீம்சிங், பி. மாதவன், எல்.வி. பிரசாத், தாதாமிராசி, புல்லையா, சி.ஹெச். நாராயண மூர்த்தி, திருலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு, கே. சங்கர், ஏ.எஸ்.ஏ. சாமி, கே.எஸ். பிரகாஷ் ராவ், சி.வி. ராஜேந்திரன், சுந்தர் கே. விஜயன், பானுமதி, விஜய நிர்மலா உள்பட 40 இயக்குனர்கள் பற்றி ஆச்சரியமான அபூர்வமான விஷயங்களை இந்நூலில் எழுதி இருக்கிறார். நாம் கேள்விப்பட்டிராத பல தகவல்கள் அடங்கியுள்ள பொக்கிஷம் இது. சினிமா துறை மீது ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.  

—-

 

பெருகி வரும் நீரழிவு நோயும் விழிப்புணர்வும், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ.

நவீன விஞ்ஞான உலகில் மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களாலும், உடற்பயிற்சி இன்மையாலும், வேறு பல காரணங்களாலும் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் உடலில் ஊடுருவி துளிர்விடுகிறது. சரிவர கவனிக்க தவறிவிட்டால் கண்விழித்திரை, நரம்பு மண்டலம், சிறுநீரகம் பாதிப்பு உட்பட அனைத்துவிதமான பின் விளவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்கிற உண்மைகளை நூலாசிரியர் பேராசிரியர் என்.சி. ராமலிங்கம் எடுத்துரைத்துள்ளார். நீரழிவு நோய்க்கான காரணம், அறிகுறிகள், தடுத்துக் கட்டுப்படுத்தும் வழிவகைகள், முறையான உணவுப்பழக்கம் குறித்தும் நூலில் கூறப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி,6/11/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *